சமீபத்தில் இந்த படத்தை பார்க்க நேர்ந்தேன். மிக அருமையாக எடுக்கப்பட்ட படம் இது. இதுதான் நிஜமான குடும்ப படம் . சிறு வயது போட்டி பொறாமைகளை ஒரு கதை மூலமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். சற்று கூட முகம் சுளிக்க வைக்காத காட்சிகள், வசனங்கள் மற்றும் பாடல்கள். ஐயா படம் னா இது படம். எடுக்கறானுன்களே மத்த படங்களையும். ஜீவாவின் அப்பாவாக வரும் நடிகர் பிரமாதமாக நடித்துள்ளார். இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். பார்த்தால் ஏதோ தொலைக்காட்சி தொடரில் வருபவர் போல் உள்ளார். நாயகன் நாயகி சுமாராக நடித்து உள்ளனர். படத்தை ஜீவா மற்றும் அன்பு வாக நடித்துள்ள இரண்டு சிறுவர்களும் இரு தூண்கள் போல தாங்கி பிடித்துள்ளனர். படம் பட்டையை கிளப்பி இருக்கிறது .........எப்பூடி
பிகு: அந்த நாயகி பர்ர்பதற்கு லட்சணமாக உள்ளார்.
No comments:
Post a Comment